தமிழக செய்திகள்

சென்னையில் இன்று வெப்பம் 3 டிகிரி வரை குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் மேகமூட்டமும் காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்க வாய்ப்பு.

சென்னையில் சூரிய ஔி குறைவாக கிடைப்பதால் பகல் வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம்.

சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 80-100 கி.மீ தொலைவில் பரவலான மேகக்கூட்டம் காணப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் மேகமூட்டமும் காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.