சேலம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் வைத்து பெண் ஆசிரியை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவித்யா என்பவரை அவரது கணவரே கொலைசெய்தது தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகன் ஸ்ரீவித்யாவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைத் தொடங்கியுள்ளனர். தப்பியோடிய குற்றவாளியை தேடிவருகின்றனர்.