தமிழக செய்திகள்

மது பிரியர்கள் திண்டாட்டம்: சென்னையில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் மூடல் - அம்பத்தூர் அலுவலகத்தில் போராட்டம்!

மதுபிரியர்கள் அரசையும் டாஸ்மாக் ஊழியர்களையும் கண்டித்து பேசினர்.

தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் நேற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது.

எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அரசு இதனை செயல்படுத்தக் கூறியதால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் திரும்ப பெரும் திட்டத்தில் உள்ள சிரமங்களுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

18 மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. இன்று 2-வது நாளாகவும் இந்த பிரச்சனை நீடித்தது. டாஸ்மாக் அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

இதனால் இன்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. வழக்கம்போல 12 மணிக்கு கடை கள் முன்பு மது பிரியர்கள் ஒவ்வொருவராக வந்தனர். கடைகள் திறக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னையில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் ஆவேசத்தில் திட்டி தீர்த்தனர். அரசையும் டாஸ்மாக் ஊழியர்களையும் கண்டித்து பேசினர்.

SCROLL FOR NEXT