தமிழக செய்திகள்

e-kyc மேற்கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது - தமிழ்நாடு அரசு

எந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தொடர்ந்து 6 மாதங்கள் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத அல்லது இறப்பு, இடமாற்றம் அல்லது போலி கார்டுகள் போன்ற குடும்ப அட்டைகளை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டிருந்தது

இந்த முடக்கப்பட்ட கார்டுகளை மீண்டும் புதுப்பிக்க 3 மாத அவகாசம் வழங்கப்பட்டு, அதற்குள் e-KYC செய்ய வேண்டும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

தவறாக பரவிய வதந்தி

இந்தத் தகவலைத் தவறாகப் புரிந்துகொண்டு, சமூக ஊடகங்களில் e-KYC செய்யாத அனைவருக்கும் அக்டோபர் 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்காது, ரேஷன் அட்டைகள் முடங்கும் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கின.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடில் e-kyc மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு

தமிழ்நாடு அரசின் இந்த ஆணை குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களுக்கு இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவானது விடப்பட்டுள்ளது.

e-KYC எவ்வாறு செய்ய வேண்டும்

நீங்கள் வசிக்கும் உங்கள் வீட்டின் அருகே உள்ள நியாயவிலை கடைக்கு நேரடியாக சென்று e-KYC புதுப்பித்தலை செய்துகொள்ளலாம்.

ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் கருவி மூலம் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கைரேகை அல்லது கண் விழி சரிபார்ப்பை மேற்கொண்டு இதை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT