தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடையே தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்க மூலதன மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக 'ரூ.165 கோடி' நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இத்திட்டத்தின் கீழ் 'ரூ.300 கோடி' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்திற்காக 'ரூ.250 கோடி' ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணிள் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விவசாயம் செய்திடத் தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம்: ரூ.25,225 கோடி
* பழங்குடியினருக்கான துணைத் திட்டம்: ரூ.2,079 கோடி
* சமூகநீதித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு: ரூ.3,937 கோடி
சமூகநீதியைக் வெறும் சொல்லாக அல்லாமல், செயலில் காட்டும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.