தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் டி.கே. பிரிவு அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் ஒருங்கிணைந்த மின்னணு கனிம மேலாண்மை தளம் அமைக்கப்படும்.
2. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், மாநில அளவிலான சுரங்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைகோள் அடிப்படையிலான சுரங்க கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.
4. தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Mineral Resources Development Corporation Limited) στ பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்படும்.
5. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.
6. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், குண்டுபெரும்பேடு மற்றும் வெள்ளரை கிராம ஏரியில் 60 கோடி ஆண்டுகள் பழமையான தாவர புதைப்படிமங்களை பாதுகாக்க தாவர புதைப்படிம பூங்கா அமைக்கப்படும். மேலும், கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் குவாரிகளில் பொது-தனியார் (Public Private Partnership) முறையின் மூலம் சுரங்கச் சுற்றுலா மையங்கள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
7. சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.
8. அரவைக் கற்கள் (ஆட்டுக்கல், அம்மிக்கல்) மற்றும் கற்சிலைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு தேவையான சாதாரணக் வரும் சிறு தொழில்முனைவோர்க்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கற்கள் தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு, தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
9. பொதுமக்கள் மற்றும் கனிமம் சார்ந்த தொழில்முனைவோருக்கு உதவிட குறை தீர்ப்பு மையம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் அமைக்கப்படும்.