தமிழக செய்திகள்

அண்ணாமலைக்கு வாழ்த்தும் இல்லை, ஆதரவும் இல்லை - தமிழிசை தடாலடி

கடந்த 3 நாட்களில் 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதில் 3 நாட்களில் 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாமலை பாஜகவை விட்டு சென்றது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,

"பாஜகவில் அண்ணாமலையின் வருகையாலோ அல்லது அவரது விலகளாலோ கட்சியின் வலிமையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.

அண்ணாமலைக்கு வாழ்த்தோ, ஆதரவோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

பாஜகவிற்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய தேவை ஏற்படவில்லை. பாஜகவை உண்மையாக நேசிக்கும் தொண்டர்கள் இப்போதும் கட்சியில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

அண்ணாமலையுடன் சில சுயநலவாதிகள் சென்றுள்ளார்கள் தவிர பாஜகவின் உண்மையான விசுவாசிகள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT