தமிழக செய்திகள்

தேர்தலில் குழந்தைகள் மூலம் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்குமாறு குழந்தைகளை விஜய் வற்புறுத்தியாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியில் வென்ற விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மே 10 இல் விஜய் முதல்வர் ஆனார்.

இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகவும், சிறார்களை பயன்படுத்தியதாகவும் தவெக, திமுக, அதிமுக என மூன்றின் மீது வாசுகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறிப்பாக, விஜய் தனது தேர்தல் பிரசாரத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாகவும் தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்குமாறு குழந்தைகளை விஜய் வற்புறுத்தியாகவும் அவரது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக, தவெக, அதிமுக பதிலளிக்குமாறு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.