கைது 
தமிழக செய்திகள்

தங்க செயின் என நினைத்து தாலிக்கயிற்றை பறிக்க முயன்ற வாலிபர்

சேலம் அழகாபுரத்தில் இன்று காலை தங்க செயின் என நினைத்து தாலிக்கயிற்றை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அழகாபுரம் கான்வெண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் கல்யாணி, கோகிலா.

வழக்கம் போல இவர்கள் 2 பேரும் இன்று காலை அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கல்யாணி அணிந்திருந்த தாலிக்கயிற்றை செயின் என நினைத்து பறிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் கூச்சலிட்டனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் அங்கு ஓடோடி வந்தனர். பின்னர் தப்பியோட முயன்ற அந்த வாலிபரை விரட்டி பிடித்து அழகாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சீநாத் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.