தமிழ்நாடு செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரும்புகை... அலறிய பயணிகள்

அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.

மாலை மலர்

செங்கல்பட்டு:

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட கரும்புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அடுத்த செங்கல்பட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் டி1 பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் சார்ஜ் போட்டபோது கரும்புகை வெளியேறியது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கரும்புகையானது அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 10 நிமிட காலதாமதமாக ரெயில் புறப்பட்டுச்சென்றது.