தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு- முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை.

மாலை மலர்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவது, தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிப்பது, பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பது, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.