தமிழ்நாடு செய்திகள்

காலிபணியிடங்களை நிரப்ப கோரி 18-ந்தேதி போக்குவரத்து பணியாளர்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.

சென்னையைத் தவிா்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம், வாயிற் கூட்டம் நடத்தப்படும். ஜூன் 18-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் ஊழியா்களின் முக்கிய பிரச்சனைகளை போக்குவரத்துக்கழக நிா்வாகங்களுக்கு வலியுறுத்த உள்ளோம்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநா், நடத்துநா்களைத் தாக்குவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

காவல்துறை, ஓட்டுநா் பிரச்சனைக்கு தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்போம். இதை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.