தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 35 கட்ட விசாரணை முடிக்கப்பட்ட நிலையில் 36-வது கட்ட கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பீச் ரோடு விருதுநகர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆணைய அதிகாரி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் ஏ.டி.ஜி.பி.விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, முன்னாள் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சி.பி.ஐ. டி.எஸ்.பி.ரவி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
36-வது கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் விசாரணை இத்துடன் நிறைவு பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
எனவே அடுத்த மாதம் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்படுகிறது. பின்னர் ஏப்ரல் மாதம் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது- சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவு