தமிழக செய்திகள்

விஜயகாந்தின் பண்புகள், குணாதிசயங்களை பின்பற்ற வேண்டும்... சரத்குமார்

விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த்.

சென்னை:

சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது:-

விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவார் என நம்பியிருந்தோம்.விஜயகாந்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் என கூறினார்.

இதன்பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற சரத்குமார் அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜயகாந் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதையடுத்து பிரேமலதா, விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT