தமிழக செய்திகள்

நடிகை மீனா கணவர் மரணம்: சரத்குமார் இரங்கல்

நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உற்றார்-உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக் கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT