நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
விரைவில் பங்குனி உத்திரம் மற்றும் கோவில் கொடை விழாக்கள் வர இருப்பதால் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் ஆடு வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது.
வழக்கமாக ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் இன்று ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது.
மிக பெரிய அளவில் வளரும் குறும்பை இன ஆடு ஒன்று இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சுமார் 50 கிலோ எடையுள்ள இந்த பெரிய ஆட்டை விலைக்கு வாங்குவதற்காக பலரும் போட்டி போட்டனர். இறுதியில் அந்த ஒரு ஆடு மட்டும் ரூ.32 ஆயிரத்திற்கு விலை போனது.
இதுபோல வெள்ளாடுகளும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. சாதாரணமான ஒரு வெள்ளாடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.
இதுபோல கால்நடை சந்தை முன்பு ஏராளமான நாட்டு கோழிகளும் விற்பனை செய்யப்பட்டன. அங்கு சேவல் கோழிகளை வாங்க பலர் ஆர்வம் காட்டினர். இதனால் நாட்டு சேவல் கோழி விலையும் இன்று அதிக விலைக்கு விற்பனையானது.
கால்நடை சந்தை அருகே இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால், ஆடு மற்றும் கோழிகள் வாங்கியவர்களையும் உடனுக்குடன் மாநகராட்சி ஊழியர்கள் சந்தையை விட்டு வெளியே அனுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.