தமிழ்நாடு செய்திகள்

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.