நெல்லை:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஷ்ணு பிரியா நகரை சேர்ந்தவர் சண்முகவேல்ராஜ் ( வயது 41).
இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை வந்திருந்தார். அப்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர் அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முக வேல்ராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.