தமிழக செய்திகள்

மதுராந்தகத்தில் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலர்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர். சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

மாலை மலர்

செங்கல்பட்டு:

விழுப்புரத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு இன்று காலை 6.40-க்கு வர வேண்டிய பயணிகள் ரெயில் 15 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பயணிகள் ரெயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர். சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் அதிக அளவில் நிற்பதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.