தமிழ்நாடு செய்திகள்

பெருந்துறை அருகே மர்ம காய்ச்சலால் கல்லூரி மாணவி பலி

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அலமுலு (38). இவர்களது மகள் ஜனனி (19). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதித்த ஜனனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.