தமிழக செய்திகள்

சிவகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு எட்டு மாத பெண் குழந்தை பலி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

சிவகிரி:

சிவகிரியை அருகே உள்ள தாண்டாம்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர்கள் சுகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. மர்ம காய்ச்சலால் அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தாண்டாம்பாளையத்தின் உள்ள அந்த குழந்தையின் வீடு அமைந்துள்ள 13-வது வார்டு முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை நடத்தி தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறையினர் வழங்கினர்.

தாண்டாம்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT