தமிழக செய்திகள்

ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

சென்னை :

பருவமழையை ஒட்டி சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாமை தரமணியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

* ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

* தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

* புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

* ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

* புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

* இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

* 1.25 லட்சம் படுக்கை வசதியும், 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT