அமைச்சர் ஐ.பெரியசாமி 
தமிழக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும்- அமைச்சர் பேட்டி

நகைக்கடன் தள்ளுபடியில் இதுவரைக்கும் வந்துள்ள புகார்களின் அடிப்படையில் முழுமையாக நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

அகவிலைப்படியை பொருத்த அளவில் அது பொதுவான விஷயம்தான். விலைவாசிக்கு உயர்வது போல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு உயர்த்த வேண்டும். கண்டிப்பாக உயர்த்தலாம்.

நகைக்கடன் தள்ளுபடியில் இதுவரைக்கும் வந்துள்ள புகார்களின் அடிப்படையில் முழுமையாக நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம் முறையாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.நியாயவிலைக்கடை பணியாளர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மதி வெங்கட் உள்பட பலர் இருந்தனர்.