தமிழ்நாடு செய்திகள்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் நுரையீரல் தானம்

நுரையீரல் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.அவசர கால முறையில் சாலை போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

மாலை மலர்

மதுரையில் சாலை விபத்தில் மரணமடைந்த 54 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் அவரது நுரையீரல் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் திருச்சி கொண்டு வரப்பட்டு, பின்னர் திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக அவசர கால முறையில் சாலை போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், 50 வயதுடைய நபருக்கு இந்த நுரையீரல் பொருத்தப்பட உள்ளது.