மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு 
தமிழ்நாடு செய்திகள்

ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் விடுதலை- மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாலை மலர்

மதுரை:

ஜல்லிக்கட்டு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

செல்லூர் அருகே மதுரையை நோக்கி வந்த ரெயிலை மறித்து தண்ட வாளத்தில் அமர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு கலவரம் போல மாறியது.

இதுதொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட குற்றவியல் 4-வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 23பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.