தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க செல்கிறேனா? சுதீஷ் விளக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Suresh K Jangir

சென்னை:

தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இவ்வாறு சுதீஷ் கூறி உள்ளார்.