தமிழக செய்திகள்

உடலில் மண்எண்ணையை ஊற்றி மனைவி, குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ் .பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேலன்.தொழிலாளியான இவர் இன்று காலை மனைவி சுமதி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீரென மண்எண்ணையை மனைவி, குழந்தை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தாங்கள் குடியிருக்கும் வழிப்பாதையை பக்கத்தை வீட்டை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாங்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு மற்றும் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.