கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை காணலாம் 
தமிழக செய்திகள்

கும்பக்கரை அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

2 ஆண்டுகளுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த அருவிக்கு செல்ல கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தபோது கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அப்போது அருவியை பார்ப்பதற்கு கூட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் சுருளி அருவி, மேகமலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதேபோல் கும்பக்கரை அருவிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவியில் தண்ணீர் அதிக அளவு வருகிறது.

இன்று முதல் கும்பக்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பக்கரை அருவி நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.