கன்னியாகுமரி:
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் 2 நாள் பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 5 மணி அளவில் கன்னியாகுமரி வந்த கவர்னரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கேரள அரசு சுற்றுலா மாளிகை மேலாளர் அஜித்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிறிது நேர ஓய்விற்கு பின்னர் கன்னியாகுமரியில் உள்ள கவர்னரின் நெருங்கிய நண்பரான முன்னாள் ஐ.நா. சபை ஆலோசகர் டாக்டர். வி. ஜெபமாலை ஆராய்ச்சியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் அவரது இல்லத்தில் இரவு உணவு முடித்து விட்டு கேரள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இன்று கன்னியாகுமரி ஸ்டெல்லா மாரிஸ் நிறுவனத்தில் நடைபெறும் விவசாய கருத்தரங்கினை அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். கேரள கவர்னரின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.