தமிழ்நாடு செய்திகள்

ராஜீவ் கொலையில் 6 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கவர்னர்களுக்கு படிப்பினை- கமல்ஹாசன் கருத்து

மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Suresh K Jangir

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் 6 பேர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.