தமிழக செய்திகள்

ஈரோட்டில் கனமழை- மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் பலி

ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதைடுயத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பெரிய அக்ரஹாரத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் சாரம்மா (34), மகன் முகமது அக்தர் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT