தமிழக செய்திகள்

அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்... எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?

மாலை மலர்

சென்னை:

சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்பதால் கவர்னரிடம் மனு அளித்தோம்.

* சபாநாயகரை மதிக்கிறோம்... அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்.

* சட்டசபையில் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.

* சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது.

* அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?

* சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான்.

* வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.