தமிழக செய்திகள்

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் நில அதிர்வு - மக்கள் அதிர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. 

SCROLL FOR NEXT