இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாஜக அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவின் பங்குடன் நடந்தது.
பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களுக்கு பாஜகவினர் பயப்பட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.