தமிழக செய்திகள்

தோனியின் தீவிர ரசிகர் தூக்கிட்டு தற்கொலை

கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார்.வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

அரங்கூர்:

கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார். மேலும் வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

இந்நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபிகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.