மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது தந்தை மாணிக்கம் அதிர்ச்சியில் தற்கொலை செய்துக் கொண்டார்.
ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கத்தின் உடற் கூறாய்வு சென்னை மருத்துவமனையில் தொடங்கியது. இதன் முதற்கட்ட விசாரணையில் அவர் மதுவில் மயில் துத்தம் என்கிற வேதிப்பொருளை கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது அவரது குடும்பத்தின் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்து போயிருக்கிறார்கள்.
இதற்கிடையே மாணவி சத்யபிரியாவின் தாயான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி புற்று நோயால் அவதிப்பட்டு வரும் உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.
மகள் கொடூரமாக ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்ததை எண்ணி கண்ணீர் மல்க தவித்து வருகிறார்.
ராமலட்சுமியின் உடல் நிலை சரியாகாத காரணத்தால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அங்கு தங்கி இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.