சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! என கூறியுள்ளார்.