சென்னை:
ஆவடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சவுபாக்கியா. இவர்களது மூத்த மகள் சிறுமி தானியா (வயது 9) முக சிதைவு நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆவடி நாசரை தொடர்பு கொண்டு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி தானியாவுக்கு 2 கட்டமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று ஆவடி பட்டாபிராம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி தானியா வீட்டுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, நாசர் ஆகியோர் உடன் சென்றனர்.