போலீசார் விசாரணை 
தமிழக செய்திகள்

களிமேடு தேர் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீசார் களிமேட்டில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

அதிகாலையில் எதிர்பாராதவிமாமாக தேரின் உச்சிப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர். 17 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேலவெளி வி.ஏ.ஓ. காசிவிஸ்வநாதன் கள்ளபெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 174 என்ற பிரிவின் கீழ் (விபத்து) வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீசார் களிமேட்டில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

விபத்தை நேரில் கண்டவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.