தமிழக செய்திகள்

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், கார் மோதியதில் சில அடி தூரங்கள் இளம்பெண் தூக்கி வீசப்படுகிறார். காயமடைந்த பெண்ணை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்படுகிறார். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

கடந்த மாதம் 27-ந்தேதி அன்று நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT