தமிழ்நாடு செய்திகள்

தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை :

சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.