தமிழ்நாடு செய்திகள்

தெலுங்கானா மக்களை பாஜக நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும்- ப.சிதம்பரம் இவ்வாறு கூற காரணம்?

பாரதிய ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

மாலை மலர்

சென்னை:

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது-

மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாரதிய ஜனதா தனது சாதகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை. இதன்மூலம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

பாரதியஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தெய்வ ஆசீர்வாதம் உண்டு. ஒரு வேளை பாரதியஜனதா ஆட்சி அமைந்தால் தெலுங்கானா மக்களை அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு கூட அழைத்து செல்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.