தமிழ்நாடு செய்திகள்

ஆவடியில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து- 4 பேர் படுகாயம்

கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்.தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதி.

மாலை மலர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகரில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சத்தம் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் படுகாயங்களுடன் தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.