தமிழக செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து- 4 பேர் உயிரிழப்பு

விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று அதிகாலை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது.

இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.