மதுரை மேலூரில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம், மின்வெட்டு விவகாரங்கள் தொடர்பாக பேசிய அவர்,
“திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக சரியாக கையாளவில்லை. பிரச்னை இவ்வளவு தூரம் நீண்டதற்கு திமுகதான் காரணம். சட்டப்பூர்வமாக இதற்கான அமைதியான தீர்வை தவெக காணும். மதத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியலை தமிழ்நாடு மக்கள் விரும்பமாட்டார்கள். தவெக தலைவர் விஜய்யும் விரும்பமாட்டார்.
12 வருடங்களுக்கு முன்பு என்னத் தேவையோ அந்த இடத்தில்தான் தமிழ்நாடு இன்று உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் மின்சார கட்டமைப்புகளை வலுப்படுத்த என்ன வேலை செய்தார்கள் என சொல்லவில்லை. நாங்கள் சொல்வோம். இந்ததுறையை பற்றிப்பேச செந்தில் பாலாஜிக்கு எந்தத் தகுதியும் இல்லை. மின்கட்டமைப்பு தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.” என தெரிவித்தார்.