தமிழக செய்திகள்

தமிழகத்தின் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது | Live Updates

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

மாலை மலர்

தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.

சட்டசபைக்கு வருகை தந்த பாமக எம்.எல்.ஏ.க்கள்

சட்டப்பேரவைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி.

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வருகை தந்தனர்.

தமிழக சட்டசபைக்கு திமுக சட்டமன்றக் குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.

 தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு உறுதிமொழி எடுக்க உள்ளனர்.

மேலும் நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைக்க உள்ளார்.