தமிழக செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.

நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT