தமிழக செய்திகள்

தவெக-வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடி பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்

ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கடந்த சில வாரங்களாக புகார்கள் எழுந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் ஜீலை 31 அன்றே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதாது ஏன்? நடவடிக்கை எடுத்திருந்தால் ஆட்சியர் புகார்ன் அளித்திருக்க மாட்டார் என்று நீதிபதிகளின் அமர்வு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்

மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் வழக்குபதிவு

மாவட்ட ஆட்சியர் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறி,இன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வப் புகார் அளித்தார். இதையடுத்து, அதன்படி தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(1) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் ஜீலை 31 அன்றே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதாது ஏன்? நடவடிக்கை எடுத்திருந்தால் ஆட்சியர் புகார்ன் அளித்திருக்க மாட்டார் என்று நீதிபதிகளின் அமர்வு குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில் உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?

மோசமான முன்னுதாரணங்களை அனுமதித்த முதல்வர்

கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT