கடன் வாங்குவதில் முந்தைய காலங்களில் இந்தியாவில் 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது மிக எச்சரிக்கையாக கடன்களை கையாண்டு 5-வது இடத்திற்குப் பின்வாங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு, 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்பர் 2026) வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் வாங்கும் விகிதத்தை 21% குறைத்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.51,300 கோடியாக இருந்த கடன் அளவு, இந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.40,500 கோடியாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் கடன் அளவு சரிந்துள்ளது.
கடன் வாங்குவதில் முந்தைய காலங்களில் இந்தியாவில் 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது மிக எச்சரிக்கையாகக் கடன்களை கையாண்டு 5-வது இடத்திற்குப் பின்வாங்கியுள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தற்போதைய பட்டியலில் தமிழ்நாட்டை விட முன்னிலையில் உள்ளன.