குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் ஒரு மணி வரை 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் வரும் 13ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதான சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுவடையும்போது கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்பிடிக்கு ஏற்கனவே சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.